ஸ்ரீ ஸத்ய ஸாயி விரத பூஜை – பகுதி 4D

ஸ்வாமியின் தெய்வீக கதை – அத்தியாயம் – நான்கு

அத்யாத்மிக சீக்க்ஷா காண்டம்

part 4D - Picture 1

பகவானின் ஆன்மீக கட்டுபாடு

ஸர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ சத்ய ஸாயி விரத கதை:

வேதங்களில் போற்றப்படும் பரப்ரஹ்மன், உருவத்திற்கும்  குணங்களுக்கும் அப்பாற்ப்பட்டவர் (அவ்யக்தா, நிர்குணா) ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ சத்ய ஸாயி பாபா கலியுகத்தில் துக்கங்களை நீக்கி சுகங்களை அளிக்க வந்துள்ளார்.

பாரத கலாச்சாரத்தின் உயர்ந்த பண்புகளை மறந்து, நன்மை தீமைகளைப் பகுத்தறியும் புத்தி இல்லாமல், கடந்த காலம் அல்லது எதிர் காலத்தைப் பற்றி சிந்தனையே இல்லாமல் திசை மாறி செல்லும் உலகமாக மாறி வருகின்றது. சனாதன தர்மத்தை மறந்து வரும் யுகத்தில், பகவான் பாபா உண்மையை எடுத்துரைக்கவும், ஆன்மீக பாதையில் செல்லவும் வழி வகுக்கின்றார்.

ஆடம்பரமும், செல்வமும் தான் எல்லையற்ற இன்பத்தை கொடுத்து, முக்தியை அடைய வழி வகுக்கும் என்ற தப்பான எண்ணம் இருக்கின்றது. இந்த அக்ஞானத்தில் மூழ்கி அதர்மமான செயல்களையும், அன்யாயமான அக்ரமமான காரியங்களையும் செய்துக் கொண்டு வாழ்க்கையைப் பயனற்றதாக வீணடிக்கின்றோம்.

பாரத கலாச்சாரத்தின் உயர்ந்த பண்புகளான சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை – இவைகளை எடுத்துக்காட்டுகள் மூலம் தெளிவுபடுத்த பகவான் அன்றாட செயல்படுகிறார்.

வர்ணாஷ்ரமாவின் விதிமுறைகளை (நான்கு வர்ணங்களும் நான்கு ஆஷ்ரமங்களும்) எடுத்துச் சொல்லி, சனாதன தர்மத்தை காக்கும் பணியில் ஈடுபட்டு, வேதங்களின் சாரம்சத்தை விவரிக்க பகவான் ஒவ்வொரு நாளும் தன் செயல்களால் உலகத்திற்கு எடுத்துரைக்கிறார். அமைதி, மகிழ்ச்சி, ஒற்றுமையை மேம்படுத்தி எல்லா மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது தான் பகவானின் குறிக்கோள்.

பகவத் கீதையின் சாரம்சமே, அதர்மத்தை ஒழித்து, தர்மத்தை காப்பது தான். ராமாவதாரத்தில், தீய சக்தியான ராவணனை ராமர் அழித்தார். ராமாயணத்தில் துளசிதாசர், சனாதன தர்மத்தின் விதிமுறைகளை எப்படி ராமர் கடைப்பிடித்துள்ளார் என்பதை விவரித்துள்ளார்.

கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகளுக்கு ஆன்மீகத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

கலியுகத்தில் பகவான் பாபாவின் அவதாரம் வித்தியாசமானது. ராஜ்ஜியம் ஒன்றும் இல்லை ஆனால் உலகத்திற்கே சக்கரவர்த்தி. ஆயுதங்கள் ஒன்றும் இல்லை ஆனால் வெற்றி அவருக்கே. எளிமை மிகுந்த ஒளிமயமுள்ள அவதாரமாக திகழ்கின்றார். அன்பும், அருளும், கருணையையும் வாரி வழங்குகிறார். ஞானத்தின் ஒளியாகவும், சகல நற்குணங்களுக்கு அதிபதியாகவும், அழகான புன்சிரிப்புடனும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை  செயலால் வாழ்ந்து காண்பிக்கிறார். பகவானின் பவித்ரமான நாமத்தை ஸ்மரணம் செய்தால், துக்கங்கள் எல்லாம் அழிந்து,  சுகங்கள் வந்தடையும்.

பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை ஜீவ ராசிகளையும் வேறுபாடு இல்லாமல் சம த்ரிஷ்டியுடன் காப்பாற்றி வருகிறார். பகவான் உண்மையின் திருவுருவம். ஆதியும் அவரே, அந்தமும் அவரே. மொத்தத்தில் எல்லாமே அவர்தான். அவர் கற்றுக் கொடுக்கும் லட்சியங்கள் பக்தி, ஞானம், வைராக்கியம் என பல. பக்தியின் அடிப்படையில் வெவ்வேறு நாட்டு மக்களை ஒன்று சேர்க்கின்றார். ஆயிரக் கணக்கான மக்களின் ஆசையைப் பூர்த்தி செய்கின்றார். எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவரவர் மதத்தை பின்பற்றி வாழ்வில் உயர வேண்டும் என்று சர்வ தர்ம கோட்பாட்டை உலகிற்கே பறைசாற்றியுள்ளார்.

சத்யம் என்னுடைய பிரசாரம், தர்மம் என்னுடைய ஆதாரம், சாந்தி என்னுடைய ஸ்வபாவம், பிரேமை என்னுடைய ஸ்வரூபம் என்று சொல்லி, ஏதாவது ஒன்றை கடைப்பிடியுங்கள் என்று எடுத்துரைக்கிறார்.

இன்றைய சமுதாயம், தர்மத்தின் ஆணிவேர்களாக போற்றப்படும் நற்குணம், ஒழுக்கம், நீதி, அறம், பொறுமை, பண்பு போன்ற உயர்ந்த நெறிகளிலிருந்து விலகியே செல்கின்றது.

பகவான் பக்தியை மேம்படுத்தி, உலக அமைதிக்காக மாநாடுகள் நடத்தி, பங்கேற்பவர்களை அவரே தேர்ந்தெடுக்கிறார். ஒழுக்கம் மேலோங்கி இருப்பதற்கும், மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கும் சேவைகள் ஆற்றி வருகிறார்.

ஜாதி, மதம், மொழி வேறுபாடு இல்லாமல், ஆயிரக்கணக்கான தெய்வீக நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ரீ சத்ய சாயி சேவா சங்கம் அல்லது சமாஜம் என்ற பெயரில் நடத்துகின்றார்கள். இந்த நிறுவனங்களின் முக்கியமான குறிக்கோள் என்னவென்றால் எல்லா மனிதர்களையும் சமமாக நடத்தி, ஒழுக்க நெறிகளுடன் செயல்பட வேண்டும் என்பது தான்.

எளிமை, உண்மை, தான தர்மம் செய்தல்,வீம்பாட்டம் இல்லாமல் வாழ்தல், தன்னடக்கம், தூய்மையான   உள்ளம் என்ற நற்குணங்களோடு செயல்படுவது தான் பாரத பண்பாட்டிற்கு பெருமை.

ஒவ்வொரு வீடும், அதில் இருப்போரும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். உண்மையை பேசி நல்ல பண்புகளோடு வாழ வேண்டும். தீவிரமாக சாதனை செய்தால் தான் உண்மையான வாழ்க்கையை கடைப்பிடிக்க முடியும். வைராக்கியம் என்ற ஒரு பண்பை வளர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

சாயி நிறுவனங்களில் பொறாமைக்கு இடமில்லை. ஒற்றுமையாக செயல்பட வேண்டும். பகவான் வலியுறுத்தும் சேவை தான் மிகவும் முக்கியமானது. மற்றவர்களுக்கு தொண்டு செய்வதின் மூலமே நமக்குள் இருக்கும் பகவானை உணர முடியும்.

ஒவ்வொருவரும் காலையில் சீக்கிரமாக எழுந்து ப்ரணவ மந்திரமான ஓம்காரத்தை ஜபித்த பிறகு தான் நாளை தொடங்க வேண்டும். எந்த காரியத்தை செய்தாலும் அன்பும், பக்தியும் நிறைந்திருக்க வேண்டும். மன உறுதியும், வேலையை நன்றாக செய்ய திறனும் கொடுப்பதற்கு பகவானை பிரார்த்திக்க வேண்டும். உறங்கும் முன், கோபம், பொறாமை அல்லது கர்வத்தோடு ஏதாவது காரியங்களைச் செய்திருந்தால், தவறை  உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

பகவானின் நடவடிக்கைகளில் முக்கியமானது ஒன்று நகர சங்கீர்த்தனம். ப்ரஹ்ம முஹுர்த்தத்தில் எழுந்து பகவானின் பெயரை எல்லோரும் கேட்கும் படி சொல்லி நாளை ஆரம்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். பகவானின் நாம சங்கீர்தனமும், பகவத் குணங்களை பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளன. அவர் நாமத்தை எக்காலமும் ஸ்மரணம் செய்தால், சுற்று சூழ்நிலைக்கும் நல்லது உண்டாகும். எல்லா மக்களும் ஒரு இடத்தில் கூடி, ப்ரணவ மந்திரத்தை ஜபித்து சுப்ரபாதம் பாட வேண்டும். பிறகு பஜனைகள் பாடிக் கொண்டே ஐந்திலிருந்து ஏழு மணி வரை நகரத்தை வலம் வர வேண்டும். ராகம், பாவம் (BHAAVAM),  தாளத்தோடு பாட வேண்டும். பக்க வாத்தியங்கள் பயன்படுத்தலாம்.

ஸ்ரீ சத்ய சாயி சத்சங்கம் என்ற பெயரிலும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தியானம், ஜபம் மற்றும் தெய்வீக புத்தகங்களை படித்து அதைப் பற்றி ஆலோசனை செய்வதும் உண்டு.

பகவான் இந்த விதிமுறைகளை எல்லா மக்களும் கடைப்பிடித்தால் உலகத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும் என்று கூறுகிறார். உண்மைக்கு கட்டுப்பட்டு தர்மத்தை நிலைநாட்டினால் பகவானின் அனுக்ரஹம் எல்லோருக்கும் கிட்டும். உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளில் இருக்கும் மக்கள் புட்டபர்த்திக்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். சாட்ஷாத் சச்சிதானந்த பரமாத்மா மூர்த்தியே அவர்தான்.

அவர் நாமத்தை நம்பிக்கையுடன் உச்சரித்து அவருடன் ஒன்றிவிட்டால் பிறப்பதின் குறிக்கோள் முடிந்து விடும். ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகிய மூன்று சக்திகளையும் கொண்டவர் பகவான். அவரை முழுக்க நம்புவது, நேருக்கு நேர் பார்ப்பது, பகவானாகவே ஆவது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் உரிமைகள். அவரும் நாமும் ஒன்று என்பதை தெள்ளத் தெளிவாக கூறுகின்றார்.

நம் நாட்டிலும், உலகிலும் சாந்தியும், சமாதானமும் மலர அவர் திரு பாத கமலங்களை பிரார்த்தனை செய்து ஒற்றுமையாக வாழ்வோம்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE: https://premaarpan.wordpress.com/2014/04/22/sri-sathya-sai-vrata-pooja-part-4-d-divine-story-of-the-lord-chapter-4-aadhyathmika-siksha-kaanda-swamis-spiritual-discipline/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s