ஸ்ரீ சத்ய ஸாயி விரத பூஜை – பகுதி ஒன்று – முன்னுரை

sathya sai vrata puja inroduction - picture 1

 

ஏறக்குறைய எல்லா இந்திய மக்களுக்கும் சத்திய நாராயண பூஜை பற்றியும், விரதத்தின் முக்கியத்துவமும், அதை செய்வதால் ஏற்படும்  நலன்கள் பற்றியும் தெரிந்திருக்கும். பகவானின் தாயார் ஈஸ்வரம்மா சத்ய நாராயண பூஜை செய்த பிறகு தான் பாபா பிறந்தார். அதனால் தான் சத்ய நாராயணன் என்ற பெயர் கொடுக்கப் பட்டது. இந்த பூஜை செய்வதற்கும், கணேஷ பூஜையும் மற்ற எல்லா கடவுளுக்கும் பூஜை செய்வதற்கும் சில தனிப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. இரண்டு அவதாரங்களையும் (ஷிர்டி, பர்த்தி) தரிசனம் செய்வதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அத்தகைய புண்ணியவதி மாதா பெத்த பொட்டு (பெத்த பொட்டு அம்மா). விரத பூஜையின் விதி முறைகளை எழுதினார்.

பகவானின் பாதங்களில்

பகவான் சாயியின் அவதாரத்தை வரவேற்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பகவானின் லீலைகளும், அன்பையும் புகழ்ந்து பேச பாடல்களும், ஸ்லோகங்களும் உள்ளன. சாயி கீதாவை புகழ்ந்து வரவேற்க பிரார்த்தனைகளும், பூஜைகளும் இருக்கின்றன. மேலும், இந்த வழிகளில் அவர் ஆசீர்வாதங்களையும் பெறலாம். அது மாதிரியான ஒரு பூஜை “சத்ய ஸாயி விரத பூஜை” ஆகும்.

intro picture 2ஸ்ரீமதி ஜி. சாரதா தேவி (அன்பாக பெத்த பொட்டு என்று அழைப்பார்கள்) மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு உயர்ந்த ஆத்மா. ஸ்ரீ சத்ய ஸாயி விரத கல்பம் என ஒரு புத்தகம் எழுதினார். அதில் பூஜையின் விதி முறைகளும், பாபாவின் ஐந்து கதைகளும் உள்ளன.

பகவான் ஸாயி புத்தகத்தை எளிய முறையில் எழுதினால் எல்லா பக்தர்களுக்கும் நன்றாகப் புரியும் எனக் கூறியதாகக் எழுத்தாளர் சொல்கிறார். பெத்த பொட்டு அம்மா விரத பூஜை விதி முறைகளை எழுதிய பிறகு  பகவானிடம் சொல்லவில்லை. பகவான் ஒரு நாள் இந்த விவரங்களைப் பார்த்து திருத்தங்கள் செய்தார். அவருக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பகவான் இந்த பூஜை செய்பவர்களுக்கு மன நிறைவு கொடுத்து, எல்லா சமயங்களிலும் அன்புடன் காப்பாற்றுவதாக உறுதியளித்தார். பக்தர்கள் அனைவரும் இந்த பூஜையை விதிமுறைப்படி ஆழ்ந்த பக்தியுடன் செய்தால் அவர்கள் ஸ்வாமியின் அருளைப் பெறுவார்கள்.

ஸ்ரீ எம். எஸ், பி. பிரசாத் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர் பகவானின் தீவிர பக்தர், ஸாயி பங்காரு மையம், நியூ டெல்லியை சேர்ந்தவர்.

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE : https://premaarpan.wordpress.com/2014/04/22/sri-sathya-sai-vrata-pooja-part-1-introduction/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s