ஸ்ரீ சத்ய சாயி விரத பூஜை – பாகம் 4A

பகவானின் திவ்ய சரித்திரம்

அத்தியாயம் – 1

 லீலா காண்டம் (பால ஸ்வாமியின் விளையாட்டுகள்)

Part 4A - Picture 1

சர்வ தேவதாதீத ஸ்வரூப ஸ்ரீ சத்ய சாயி விரத கதை:

இந்த புண்ணிய பாரத பூமியில் யுகம் யுகமாக,  கடவுள் மனித குலத்தின் நன்மைக்காக, மேன்மைக்காக பலப் பல அவதாரங்கள் எடுத்துள்ளார் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். உலகில் பல பெரிய நாடுகள் இருக்கின்றன. ஆனால் கடவுளின் மகிமை எல்லாம் பெரிய அளவில் பாரத நாட்டுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். எண்ணற்ற யோகிகள்,  துறவர்கள்,  மடாதிபதிகள்,  ரிஷிகள், பக்தர்கள் யாவரும் இப்புண்ணிய பூமியில் பிறந்திருக்கின்றனர். இவர்கள் சனாதன தர்மத்தை கடைப்பிடித்து, ஆசைகளை துறந்து,   தபோநிலையை பேணி காத்து,  தன்னையே அதற்காக அர்ப்பணித்துள்ளனர். இவர்கள் ஆன்மீக ரகசியங்களை சுற்றுப்புறமுள்ள சாதாரண மனிதர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார்கள். இப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்கள் பாரத பூமியில் ஜன்மம் எடுத்ததால் பாரதம் “ஆர்ய வர்தா எனவும் அழைக்கப்பட்டது.

உலகத்தில் எப்பொழுதெல்லாம் சனாதன தர்மத்திற்கு அபாயங்களும்,  தடைகளும் ஏற்படுகின்றனவோ புராதன முனிவர்களின் சொற்படி, அப்பொழுதெல்லாம், கடவுள் தானே இப்பூமியில் அவதாரம் எடுத்து அபாயங்களை ஒழித்து,  தர்மத்தை நிலை நாட்டுவார். இது ஒரு புதுமையான விஷயமல். படைப்பு என்பது எற்பட்டதிலிருந்தே,  யுகம் யுகமாக, கடவுள் இவ்வாறு செய்துக் கொண்டிருக்கிறார். திருவுள சித்தம், என்றும்,  எப்பொழுதும், தடையில்லாததும், முடிவில்லாததும் ஆகும். எத்தனை திறமையான மனிதனாக இருந்தாலும்,  இத்தர்மத்தின் உண்மையான ரூபத்தை விவரிக்க இயலாது. பிறகு நம்மைப் போன்ற சாதாரண மானுடர் எப்படி இதையெல்லாம் புரிந்துக் கொள்வது?

பகவானே பகவத் கீதையில் கூறியுள்ளது யாதெனில் – தர்மத்தை காப்பாற்ற யுகம் யுகமாக நான் அவதாரம் எடுப்பேன். அதாவது தர்மம் என்பது மாற்ற முடியாததும், அழிவில்லாததும் ஆகும். எங்கெங்கே அதர்மம், அந்நியாயம்,  தீமை நடக்கும் அபாயம் உள்ளதோ அங்கேயெல்லாம் கடவுள் அவதாரம் எடுத்து,  தீய சக்திகளை ஒழித்து, தர்மத்தை நிலைநாட்டுவார். ஆனால் நம்மை போன்ற பாமர மனிதர்கள் கடவுளின் கணக்கில்லா அவதாரங்களை கணக்கு வைத்துக் கொள்ள இயலாது. நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் அதர்மம், பாபம்,  அநீதி, கொடூரம், அட்டூழியம் எல்லாவற்றையும் காண்கிறோம். ஆறு விதமான தீய சக்திகள் நம்மை ஆன்மீக வழியில் ஈடுபட விடாமல் தடுக்கின்றன. (காமம் – அதீத காதல்,  க்ரோதம் – கோபம்,  லோபம் – கஞ்சத்தனம்,  மோஹம் – அளவற்ற ஆசை,  மதம் – கர்வம்,  மாத்சர்யம் – பொறாமை)

இத்தீய குணங்களே உலகில் ஏராளமாக வளர்ந்துள்ளன. நல்ல குணங்களான பக்தி, நம்பிக்கை, பண்பு, மரியாதை ஆகியவை காண அரிதாகி விட்டன. ஒருவர் மற்றவருக்கு கொடுக்க வேண்டிய சாதாரண நடைமுறை தகுதியைக் கூட மனிதன் கடைப்பிடிப்பதில்லை. இவ்வாறு யாரேனும் ஒருவர் இருவர் இப்பண்புகளைக் கடைப்பிடித்தாலும் அவர்களது வாழ்க்கை முறை மிக கடினமாகி விடுகிறது. நல்ல பண்புகளைக் கெடுக்க நாஸ்திகம் என்னும் விஷம் எல்லா இடமும் பரவி அதன் ஆதிக்கத்தை காண்பிக்கிறது. கருணையுள்ள கடவுள் இதைக் கண்டு மனித ரூபம், பரப்ரஹ்ம, சச்சிதானந்த மூர்த்தியாக அவதாரம் செய்ய தீர்மானித்துள்ளார். தன் காரியத்தை சாதகமாக்க அவர் சித்ராவதி நதிக்கரையில் உள்ள சிறிய கிராமமான புட்டபர்த்தியை தேர்ந்தெடுத்துள்ளார். இக்கிராமம் ஆந்திர பிரதேசத்தில், ராயல் சீமா எல்லையில் அனந்தபூர் ஜில்லாவில் புக்கப்பட்டணம் அருகே உள்ளது.

இக்கிராம சூழ்நிலை நம்மை பகவான் கிருஷ்ணன் பாலகனாக லீலைகளும், குறும்புகளும் செய்த வ்ரஜ பூமியை நினைவு படுத்துகிறது. ஒரு காலத்தில், புட்டபர்த்தியானது ரத்னாகரா என்ற குல பெயருடைய சூர்யா வம்ச ராஜாக்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொதுவாக சாதுவாகவும், பக்தி உடையவர்கள் ஆகவும் இருந்தனர். பலர் உலக வாழ்வைத் துறந்து, சந்நியாசம் மேற்கொண்டு அவதூதர்கலாக வாழ்ந்தனர். சமீப காலத்தில் கொண்டம ராஜு என்பவர் இக்குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். இவர் சிறந்த பக்திமான். இராமாயணத்தின் பல பாடல்களை மனப்பாடமாக சொல்லும் திறமைக் கொண்டவர். பொது இடங்களில் அவர் இப்பாடல்களை பாடினால். கேட்ட பொது மக்கள் மிக சந்தோதம் அடைந்தனர் .இவர் பல தர்ம ஸ்தாபனங்களை உருவாக்கியதாக கூறப்படுகின்றது. இவரது மனைவியான ஸ்ரீமதி. லக்ஷ்மம்மாவும் பல விரதங்களை ஆழ்ந்த பக்தியுடன் கடைப்பிடித்துள்ளார்.

இத் தம்பதிக்கு பெத்த வெங்கம ராஜு, சின்ன வெங்கம ராஜு என இறந்து மகன்கள் இருந்தார்கள். பெரிய மகன் தன் தந்தையை பின்பற்றி சங்கீத கலைகளில் சிறந்து இராமாயண பாட்டுகளை பாடி வந்தார். சிறிய மகன் புத்தகங்கள் எழுதுவதிலும், மூலிகை மருத்துவம் மற்றும் ஜோதிட கலையில் சிறந்து விளங்கினார். நாளடைவில், பெத்த வெங்கம ராஜு மீனரகண்ட சுப்பா ராஜுவின் மகளான ஈஸ்வரம்மாவை மணந்துக் கொண்டார். இவர்கள் “ரத்னாகர்” வம்சத்தின் பந்துக்கள். இவர்களுக்கு முறையே மூண்டு செல்வங்கள் பிறந்தன. பெரிய மகனின் பெயர் சேஷம ராஜுவும், பெண் மக்கள் பெயர் வெங்கம்மாவும், பர்வதம்மாவும் ஆகும்.

சிறிது காலத்திற்குப் பிறகு ஈஸ்வரம்மா நான்காவது முறையாக கற்பமாக இருந்தார். வெளிப் பார்வைக்கு பிறக்காத இக்குழந்தையும் மற்ற குழந்தைகள் போலவே காணப்பட்டது. ஆனால் உண்மை அது அல்ல. வேதங்கள், பர ப்ரஹ்மத்தை ஆதி மூல படைப்பாக கருதின. அதையே சத், சித், ஆனந்தம் என வர்ணிக்கிறார்கள். அதாவது பரமானந்தனாக இருப்பவர் ஈஸ்வரம்மாவின் வயிற்ருக்குள் வளர்ந்துக் கொண்டிருந்தார்.

வயிற்றில் இருந்த பரமன் சில அபூர்வ சக்திகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். திடீர் திடீரென்று இரவு வேளைகளில் கொண்டம ராஜுவின் வீட்டில் சங்கீத வாத்தியங்களின் முழக்கம் கேட்கும். இதை பிறக்கப் போகும் குழந்தைக்கு சுப சகுனமாக கருதியோ ,வேறு எந்த விதமான சந்தேகமோ யாரும் படவில்லை. இதே மாயையின் சக்தி; இம் மாயையை கடவுளே பரப்பிக் கொண்டிருந்தார். தற்செயலாக  குழந்தைப்  பிறப்பு  சம்பந்தமாக ஒரு நிகழ்வு ஏற்பட்டது. பகவானின் பாட்டி (தந்தையின் தாயார்) லக்ஷ்மம்மா பக்கத்து வீட்டில் நடந்த சத்ய நாராயண பூஜைக்கு சென்றிருந்தார். அங்கிருந்து பிரசாதம் கொண்டு வந்து தன் மருமகளுக்குக் கொடுத்தார். சற்று நேரத்தில் குழந்தைப் பிறந்தது.

மனதாலோ, வார்த்தைகளாலோ  புரிந்துக் கொள்ள முடியாத பகவான்,  தன் திவ்ய சாதனைக்காக, உலகை மேம்படுத்த மனித ரூபத்தில் வந்தார். பிறந்த வேளை ப்ரஹ்ம முஹூர்த்தம். 1926ம் வருடம், அதாவது அக்ஷய வருடம் நவம்பர் 23ம் தேதி (கார்த்திகை மாதம்) திங்கட் கிழமை, திருதியை அன்று அதிக்காலையில் இப்பூமியில் அவதாரம் செய்தார். பிறந்த போதே குழந்தை மிக அழகாக இருந்தது. வர்ணிப்பது என்றால் ப்ரகாசமுடைய பெரிய கண்களும், அதில் கருணையும், அன்பும் பொங்கி வழிந்திட முன் நெற்றியில் புரளும் சுருண்ட தலை முடியுமாக குமிழிட்ட கண்களுமாக பார்ப்பவரை மதி மயக்கச் செய்தது. ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் இருக்கும் ஸ்ரீவத்சம் போன்று குழந்தைக்கு மார்பில் பிறவி மச்சம் இருந்தது. உதடுகள் ரோஜா மலரை ஒத்த நிறத்துடன் அழகாக இருந்தன. சிறிய பாதங்களில் திவ்ய முத்திரைகளான சங்கும், சக்கிரமும் இருந்தன. மொத்தத்தில் குழந்தை பௌர்ணமி நிலவைப் போல ப்ரகாசமாகவும், அழகாகவும் இருந்தது.

வீட்டில் இருப்போரும், கிராமத்து மக்கள் அனைவரும் இந்த அதிசயமான குழந்தையைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர். சத்ய நாராயண ஸ்வாமியின் பிரசாதத்தை சாப்பிட்ட சற்று நேரத்திற்குப் பிறகு குழந்தை பிறந்ததால் தாத்தா, பாட்டி அக்குழந்தைக்கு சத்ய நாராயணன் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அப்பெயரையே சூட்டினர். குழந்தையே தெய்வத்தின் அவதாரம் என தெரியாமலேயே அவர்களுடைய பக்தியால் அப்பெயரைச் சூட்டினார்கள். பெயருக்குத் தகுந்தாற்போல் குழந்தை, நிர்குண பரபிரம்மமாக, மாற்றமில்லா, முடிவில்லா, எல்லையில்லா, ஆதியும் அந்தமும் இல்லாததாக வளர்ந்தது. சத்ய என்றால் உண்மை. நாராயண என்றால் எப்பொழுதும் நிறைந்துள்ள தெய்வீக சக்தி. இவ்விரண்டு வார்த்தைகள் சேர்ந்து உள்ளார்ந்த பொருளை விவரிக்கிறது. உண்மையிலேயே, சத்ய நாராயணா குழந்தை பருவத்திலேயே தெய்வீக சக்தி கொண்டு விளங்கினார்.

குழந்தை வளர வளர, தெய்வீக சக்திகள் வெளிப்படலாயிற்று. சாதாரண சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஆற்றல், அளவுக் கடந்த கருணை, பிரேமை, பொறுமை, அஹிம்சையைக் கடைப்பிடித்தல், பேச்சே இனிய பாடல் போலவும், பாலகோபாலனின் குழலோசை போலவும், களங்கமில்லாத தோற்றமுமாக குழந்தை வயதிற்கு மீறிய ஆற்றல்களுடன் இருந்தார். பலரும் தெய்வமே குழந்தை வடிவில் பூலோகத்திற்கு வந்து விட்டதோ என மனதில் எண்ணினார்கள். இருந்தாலும் அவருடைய அடையாளத்தை எவராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அவர் கிராம மக்கள் அனைவர் மனதையும் கொள்ளைக் கொண்டார்.சாதாரண பாலகனைப் போல் நடமாடினாலும், விவரிக்க இயலாத ஒரு தனித் தன்மையுடன் விளங்கினார். அவர் சொல்லேத் தீர்ப்பு; எவரும் எதிர் வார்த்தை கூற மாட்டார்கள். கிராமத்து சிறுவர்களை அவர் ஒன்றுக் கூட்டினார். அவரது தலைமையில் பாலகர்கள் சிறு குழுக்களாக வீதி தோறும் சுற்றி, தெய்வீக பாடல்களும் பஜனைகளும் பாடி வந்தனர். புதிய பாட்டுக்களை அமைத்து, மற்ற பாலகர்களுக்கு கற்றுக் கொடுத்து பாட வைத்தார். பல திறமைகள் கொண்ட இப்பாலகனையும் அவர் பஜனை குழுக்களையும் எல்லோரும் விரும்பினார்கள்.

வாழ்க்கையில் எளிய நிலமையிலுள்ளவர், உடல் ஊனமுற்றவர் ஆகியவரிடம் மிகவும் அன்பு காட்டி வந்தார். தன் வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்து இல்லாதவர்களுக்கு அளித்து வந்தார். தான் உண்ணாவிட்டாலும் மற்றவரை உணவு உண்ண வைத்தார். கிராமத்தில் காலரா போன்ற கொடிய நோய் உள்ள வீடுகளுக்கு சென்று குழுவுடன் பஜனைகள் பாடி அவர்களுக்கு ஆறுதல் அளித்தார். சிறுவர்கள் இவரை குருவாக மதித்தனர். எப்பொழுதும் ஸ்வாமியை  சுற்றி இருந்து, அவர் இட்ட ஏவல்களை தாமதமின்றி செய்து வந்தனர். சின்ன வயதிலேயே சத்ய நாராயணா தன் குழுவுடன் சேர்ந்து நாடகங்கள் நடத்தி, பஜனைப் பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று வந்தனர். தன் தெய்வீக குணத்தை பற்றி மற்றவர்களுக்கு யாதொரு குறிப்பும் கொடுக்காமல் பல நற்காரியங்களை சமூகத்தின் நலத்திற்காக செய்து வந்தார். அவருடைய அதீத நன்னடத்தை, நாளடைவில் சிறுவனாக இருப்பினும் அவரை புட்ட பர்த்தி கிராமத்தின் தலைவர் ஆக்கியது. இவ்வாறு கிராம மக்கள் சிறுவனை கொண்டாடும் போது, வீட்டில் இருந்த உறவினரும் மகிழ்வுற்றார்கள்

புட்டபர்த்தியில் ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம் இருந்தது. இந்த பள்ளிக்கூடத்தை நடத்திய ஆசிரியர் சற்று முன்கோபம் உள்ளவர்; கடுமையாக நடந்துக் கொள்பவர். சிறிய தவறுக்கு கூட கடினமானத் தண்டனை கொடுப்பவர். சத்ய நாராயணன் அப்பள்ளியில் ஒரு மாணவன். ஆசிரியருடைய நடவடிக்கைகள் அவர் மனதுக்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர் சரியான நடத்தைப் பற்றி சிறிய கவிதைகளும், பாட்டுகளும் இயற்றி மற்ற மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்து பாட வைத்தார். ஆசிரியர் வெட்கப்பட்டு தன்னை திருத்திக் கொண்டார். கடவுள் எல்லாக் கலைகளிலும் தேர்ந்த குருவாயிற்றே!!! அதனால் சிறு வயதிலேயே கவிதை அவருக்கு தானே இயற்ற வந்தது. அவர் சச்சிதானந்த மூர்த்தியின் மனித வடிவம். பதினான்கு லோகங்களையும் தன்னுள் அடக்கியவர். பாலகன் சத்ய நாராயணனுடைய ஒவ்வொரு குறும்பும், கும்மாளமும் பக்தியின் லீலைகளாகும்.

அன்று அப்பாலகன் இயற்றிய பாடல்கள் இன்று வரை பக்தர்களால் பாடப்பட்டும், கேட்கப்பட்டும் வருகின்றன .கிருஷ்ணாவதாரத்தில் பால கோபாலன் செய்தது போல் சத்ய நாராயணன் சித்ராவதி நதிக்கரையில் தன் நண்பர் குழுவுடன் கேளிக்கை செய்து, குறும்புகள் செய்து’அவர்களுடன் உணவும் உண்டு லீலைகள் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் பழங்களும், தின்பண்டங்களும் சிருஷ்டித்து எல்லோருக்கும் பிரசாதமாக வழங்கி வந்தார். மற்றவர்கள் “எங்கிருந்து கிடைத்தன?” என கேட்டதற்கு தன் வீட்டிலிருக்கும் ஒரு சக்தி இவைகளை கொடுத்ததாக புன்சிரிப்புடன் சொல்லி வந்தார்.

இவ்வாறு எட்டு வருடங்கள் கடந்தன. பாலகன் சத்ய நாராயணன் ஆரம்பப் பள்ளிக் கூடத்தை முடித்தார். மேல் படிப்புக்காக புக்கப்பட்டினத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப் பட்டார். அங்கிருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் அவரை மிகவும் அன்பாக நடத்தினர். பாலகனுடைய நற்பண்புகள் எல்லோரையும் கவர்ந்து சந்தோஷப் படுத்தின. தன் அவதார ரகசியத்தை இங்கு எவருக்குமே அவர் தெரியப் படுத்தவில்லை. பக்தர்களையும், நற் பண்புடையோர்களையும் காப்பது தான் நோக்கம் என எவரும் புரிந்துக் கொள்ளவில்லை. வகுப்பில் எப்போதும் ஏதோ சிந்தனையில் மூழ்கியவராக பாலகன் காணப்படுவார். அது அவர் சுபாவம். ஒரு முறை, கடுமை குணம் கொண்ட ஒரு ஆசிரியர் பாடப் புத்தகத்தில் கற்றுக் கொடுத்த பாடம் எதையும் சத்ய நாராயணன் எழுதாததால் அவரைப் பிடித்து பெஞ்சின் மீது நாள் முழுவதும் பள்ளி முடியும் வரை ஏறி நிற்கும்படி தண்டனைக் கொடுத்தார். பாலகன் ஆசிரியரின் ஆணைக்கு கீழ்படிந்து உடனே பெஞ்சின் மேல் ஏறி நின்றார். எதுவும் செய்ய முடியாததால், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் சற்று அமைதியற்று இருந்தனர். வகுப்பு முடிந்தவுடன் ஆசிரியர் நாற்காலியிலிருந்து எழ முயற்சித்தார்.

ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. நாற்காலியோடு ஒட்டிக்கொண்டது போல் இருந்தார். அடுத்த வகுப்பு எடுக்க வந்த ஆசிரியர் இதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தார். அந்த ஆசிரியர் சத்ய நாராயணனிடம் அன்பு கொண்டவர்.  இப்பாலகன் கடவுளின் அவதாரம் என அவர் உள்மனத்தில் ஓர் எண்ணம் இருந்தது. இவ்வாசிரியர் பாலகனை உட்கார அனுமதி அளித்ததும் பரிதாபமான முன் வகுப்பு ஆசிரியரும் நாற்காலியிலிருந்து விடுபட்டார். இந்த விஷயம் பள்ளிக்கூடம் முழுவதும் பரவி அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆசிரியரின் இந்த இக்கட்டான நிலைக்கு பாலகன் சத்தியத்தின் கோபமோ வன்மமோ காரணம் இல்லை. பாலகனின் அதீத தெய்வ சக்தியை சிறிது வெளிக்காட்டும் ஒரு குறும்பே ஆகும். பாலகனின் வசீகரம் மட்டும் அல்ல; அவரின் ஒழுக்க முறை, சுய கட்டுப்பாடு, அமைதி போன்ற குணங்களும் மற்றவர்களை கவர்ந்தன.

பள்ளியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சத்யம் மட்டுமே பிரார்த்தனை கீதங்கள் பாடுவார். பாட்டோ, நாடகமோ, விளையாட்டோ எது நடந்தாலும் அதில் முக்கிய பாத்திரம் ஏற்று கௌரவ படுத்துவார். அவருடைய லீலைகளையும், தெய்வீக சக்திகளையும் எவ்வளவோ மறைக்க முயன்றாலும், அவை பொங்கி பூரித்து வெளிப்பட்டன. நாட்கள் முன்னேறின. சத்யத்தின் மூத்த சகோதரர் சேஷம ராஜு, அனந்தபூர் மாகாணத்தில் உரவகொண்டா என்ற சிறு ஊரில் உயர்நிலை பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக இருந்து வந்தார். ஆங்கிலம் படித்து, பிற்காலத்தில் பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தன் இளைய சகோதரரை தன் பள்ளியிலேயே படிக்க வைக்க ஆசைப் பட்டார். தன் பெற்றோரிடம் அனுமதி கோரி, தன் பள்ளியிலேயே தன்னுடைய இளைய சகோதரரை எட்டாவது வகுப்பில் சேர்த்தார். பாலகன் சத்யத்தின் திகைக்க வைக்கும் புகழ் அவருக்கு முன்பே உரவகொண்டாவை சென்று அடைந்துவிட்டது. அங்குள்ள ஆசிரியர்களும் , மாணவர்களும் அவரை மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினர். மக்கள் தங்கள் கஷ்டங்களை அவரிடம் வந்து கூறியதும் அவர்களது இறந்த காலம், எதிர் கால நிகழ்ச்சிகளைக் கூறி அவர்கள் மனதை சமாதானப் படுத்தினார். தன் பழக்கப் படி ஒரு கை அசைப்பில் ஏராளமான பழங்களையும், தின்பண்டங்களையும் சிருஷ்டித்தார். இதைக் கண்ட மக்கள் மெய்மறந்து இருந்தனர். இவர் நடத்தும் லீலைகளைக் கண்டு கடந்த ஜன்மங்களில் எத்தகைய புண்ணியங்கள் செய்து தெய்வீக சக்தியை பெற்றாரோ, இப்பொழுது இவ்வளவு பரிசுகளை எல்லோர் கண் முன்னும் சிருஷ்டிக்கிறார் என நினைத்து ஆச்சரியப் பட்டனர். இவருடைய பெருமை எல்லா ஊர்களிலும் பரவ ஆரம்பித்தன – உதாரணத்திற்கு கமலாபுரம், தர்மாவரம், பெனுகொண்ட, புக்கப்பட்டணம் போன்றவை – மக்கள் கூட்டம், கூட்டமாக உரவகொண்டாவிற்கு வர தொடங்கினர். கஷ்ட நிலையில் உள்ளோர்,  நஷ்டம் அடைந்தோர் தன் நிவாரணத்திற்காக இவரிடம் வர தொடங்கினர். படித்த மேதைகளும், வேதாந்திகளும் இவரை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சினர். பல வருடங்களாக ஞான நூல்களை கற்று தேர்ந்து, பலருக்கு கற்றுக் கொடுத்திருந்த போதும், பாலகன் சத்தியத்தை கண்டதும், தான் புரிந்து கொண்டதும் கற்றுக் கொடுத்ததும் தவறோ என அவர்கள் எண்ணினார்கள்.

சத்யம் அவர்களின் தவறுகளைத் திருத்தினார். அவர்களுக்கு நூல்களின் பொருளை தன்னுடைய கைத் தேர்ந்த முறையில், அவர்கள் நினைத்துப் பார்க்காத வகையில் கூறுவார். இதனால் நேருக்கு நேர் சந்திக்கும் போது அவர்களின் மனதில் அவரது ஆழ்ந்த அறிவையும் புரிந் கொள்ளும் முறையையும் கண்டு பெரும் மதிப்பு ஏற்பட்டது. நட்புரிமையுடன் செய்யும் ஆட்சேபத்திற்கு அவர்கள் எதிர் கேள்வி கேட்க அஞ்சினர். எத்தனை கைத் தேர்ந்தவர்களாக அவர்கள் இருப்பினும், பாலகன் சத்யம் சிறிதும் தயக்கமின்றி அவர்களது தவறான எண்ணங்களை சுட்டிக் காட்டி திருத்தினார். பார்ப்பவர்கள் சத்தியத்தின் அறிவைக் கண்டு திகைத்து நின்றனர். தோற்றத்தில் அதிகம் கல்வியில்லாத சிறு பாலகனாக தோன்றும் இவர் எப்பொழுது இக்கலைகளில் தேர்ந்தார்??  இச்சிறு பாலகன் பல நூல்களில் உள்ள தத்துவங்களை, ரகசியங்களை எவ்வாறு கற்றார்?? பண்டிதர்களுக்கே இவ்விஷயங்களைப் பற்றி அறிய பல வருடங்கள் தேவைப்படும். நம்ப முடியாமல் மக்கள் ஆச்சரியம் அடைந்து சிறு குரல்களில் விமர்சித்துக் கொண்டனர். ஆனால் இவர்கள் சந்தேகங்களை தீர்ப்பவர் யாரோ??

பல சமயம் பாலகன் சத்யம் எங்கோ சூன்யத்தை நோக்கிக் கொண்டு தனக்குத் தானே சிரித்துக் கொள்வார். தன்னை சுற்றியுள்ள மக்களிடம் பேசினாலும் அவர் பார்வை எங்கோ வெகு தூரத்தில் இருக்கும். அடிக்கடி தன் கண்களை மூடியவாறு, ஏதேனும் பாட்டு பாடிக் கொண்டிருப்பார்;  அல்லது அங்கிருந்து விலகி மணிக்கணக்காக ஏகாந்தமாக அமர்ந்திருப்பார். இதைக் கண்ட குடும்பத்தினர் பயமடைந்தனர். ஏதேனும் மானசீக வியாதியோ அல்லது ஆவிகளின் ஆக்கிரமிப்போ என எண்ணினர்.

பலர் பலவிதமாக பேசி வதந்திகளை கிளப்பினார்கள். ஆனால் என்ன பிரச்சனை என யாராலும் ஊகிக்க முடியவில்லை. சகோதர சேஷம ராஜுவிற்கு என்ன செய்வது என புரியவில்லை. பெற்றோர்களை வரவழித்து சகோதரர் சத்தியத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். இத்தோடு உரவகொண்டாவில் சத்தியத்தின் படிப்பிற்கு ஒரு முடிவு ஏற்பட்டது; பழையபடி தன்னுடைய லீலைகளை புதிய ஊக்கத்துடன் செய்யத் தொடங்கினார். மறுபடியும் புட்டபர்த்தியின் தெருக்களில் பக்தி ஊர்வலங்களும், சித்ராவதி நதியின் மணற்பரப்பில் விளையாட்டுகளும் தொடங்கின.

வெகு விரைவில், சத்யநாராயணன் தன் மகிமைகளையும், தெய்வீக சக்திகளையும் உலகுக்கு வெளிப்படுத்த நிச்சயித்தார். ஒரு நாள் காலையில் எல்லோரையும் தன் வீட்டின் முன் வரும்படி அழைத்தார். தன் கை அசைப்பில் நிறைய கற்கண்டுகளை சிருஷ்டித்து அனைவருக்கும் விநியோகித்தார். பார்வையாளர்கள் அவரது தந்தை பெத்த வெங்கமராஜுவை இவ்வதிசயத்தை காண அழைத்து வந்தனர். தந்தை கோபமடைந்து, இவ்வித முட்டாள்தனமான காரியங்களை தன் வீட்டில் நடத்த அனுமதிக்க முடியாது என கையில் ஒரு தடியுடன் வெளியே வந்தார். ஸ்ரீ பெத்த  வெங்கமராஜு சாயி பாபாவின் அருகில் சென்று “நீ யார்? நீ கடவுளா  அல்லது ஏதேனும் ஆவி ரூபமா?” என கேட்டார். அதற்கு சத்யம் சுருக்கமாக, “நான் சாயி பாபா” என  கூறினார். பெத்த வெங்கமராஜுவின் கையில் இருந்த தடி தானே கீழே நழுவியது. பாலகன் மேலும் இவ்வாறு கூறலானார், நான் உங்களுடைய சத்யம் அல்ல நான் ஆபஸ்தம்ப சூத்திரம், பாரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த சாயி பாபா. உங்களை எல்லாம் கொடுமைகளிலிருந்து விடுவித்து உங்கள் வாழ்வை மேம்படுத்த அவதரித்துள்ளேன்.நீங்கள் எல்லோரும் உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்”.

இதைக் கேட்ட சகோதரர் சேஷம ராஜு, ஸ்ரீ சாயி பாபாவின் அருகில் சென்று, “நீங்கள் அவதாரம் எடுத்த காரணம் என்ன?” என கேட்டார். அதற்கு மிகவும் தெளிவாக “உங்கள் முன்னோர் வெங்கவ தூதர், நான் தங்கள் குடும்பத்தில் அவதரிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்திருந்தார். அவருடைய பிரார்த்தனையை நிறைவேற்ற நான் இங்கு அவதாரம் எடுத்துள்ளேன்” என பதில் கூறினார். இதற்கு ஆதாரம் என்ன? என வினவியதும், சாயி பாபா கை நிறைய மல்லிகைப் பூக்களை அருகில் இருந்தோரிடமிருந்து எடுத்து அதை தரையில் தூவினார். மலர்கள் தாமாகவே வரிசைப் படுத்திக் கொண்டு “சாயி பாபா” என தெலுங்கில் அமைந்தன.  எல்லோர் மனதிலும் இருந்த சந்தேகம் விலகியது. இதைக் காட்டிலும் சிறந்த ஆதாரம் என்ன இருக்க முடியும்!!!

இதற்கு பிறகு, மக்கள் கூட்டம் கூட்டமாக சாயி பாபாவை தரிசிக்க வந்து பக்தியுடன் சேவை செய்ய ஆரம்பித்தனர். குடும்பத்தினரால் இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். என்ன செய்வது என்று புரியவில்லை. ஒரு நாள் பாபா அவர்களிடம், “நான் இங்கு வீட்டில் இருந்தால் அவதரித்த நோக்கம் நிறைவேறாது. ஆதலால் வேறு இடம் நோக்கி செல்கிறேன்” என கூறினார். இதைக் கேட்ட தாயார் ஈஸ்வரம்மா மிகவும் வேதனைக் கொண்டு வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என கெஞ்சினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. 20-10-1946 அன்று ஸ்ரீ பாபா வீட்டை விட்டு கிராமத்தில் இருந்த தோட்டத்தில் சென்று அமர்ந்தார். கலவரம் அடைந்த தாயார் அங்கும் சென்று ஸ்ரீ பாபாவை வீட்டிற்கு திரும்புமாறு பலமுறை வேண்டினார். வீட்டிலிருந்தே அவர் விருப்பப் படி பக்தர்களுக்கு வேண்டியதை செய்யுமாறும், அதற்கு எந்த தொந்தரவும் வராதவாறு தான் பார்த்துக் கொள்வதாக சொன்னார்.

தாயார் தன்னால் முயன்ற எல்லா வழிகளிலும் வீட்டிற்கு வந்து உணவு உண்ணும்படி ஸ்ரீ பாபாவை வேண்டினார். தாயாரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியதை தன் கடமையாக எண்ணிய ஸ்ரீ பாபா வீட்டிற்கு திரும்பி வந்தார். மகனுக்கு வேண்டிய தினசரி உணவை சமைத்து தாயார் அவர் முன் வைத்தார். அதிலிருந்து மூன்று கவளங்கள் மட்டுமே உண்டார். பிறகு எழுந்து “மாயை விலகியது. ஏன் கஷ்டப்பட வேண்டும்?” என கூறி நேரே ஈஸ்வரம்மாவின் சகோதரர் சுப்பாராஜுவின் வீட்டிற்கு சென்றார். அங்கு சற்று நேரம் இருந்து விட்டு ஸ்ரீமதி கர்ணம் சுப்பம்மாவின் இல்லம் சென்று, அதை தன் இருப்பிடமாக்கி கொண்டார்.

ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீமதி சுப்பம்மா ஸ்ரீ பால பாபாவின்  தெய்வீக சக்தியை புரிந்து கொண்டு, அவரை கடவுளின் அவதாரமாகவே மனதார வணங்கி வந்தார். தன் வீட்டை பகவான் இருப்பிடமாக்கி கொண்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த தெய்வீக வீட்டிலிருந்து பல்வேறு லீலைகளை நடத்திக் கொண்டு மக்களையும், பக்தர்களையும் சந்தோஷப் படுத்தினார்.

முதல் அத்தியாயம் முடிந்தது.

( மறுபடியும் பூஜை செய்ய வேண்டும். பழமும், தேங்காயும் நிவேதனமாக படைத்து விட்டு, ஆரத்தி எடுக்க வேண்டும். இது போல் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் செய்ய வேண்டும்)

மொழி பெயர்ப்பு:

சரஸ்வதி, ரஞ்சனி

SOURCE : https://premaarpan.wordpress.com/2014/04/22/sri-sathya-sai-vrata-pooja-part-4-a-divine-story-of-the-lord-chapter-1-leela-kaanda-swamis-child-plays/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s